Latestஇந்தியாசினிமா

எனது இசைக்கு சவாலான ‘பொன்னியின் செல்வன்’ – ஏ.ஆர் ரஹ்மான்

இந்தியா,மார்ச் 2- மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருக்கின்றார்.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படம்தான்,அவர் இசையமைத்த படங்களில் மிக கடினமான படம் என்று அண்மையில் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். இது ஒரு காவிய படம் என்பதால், அதன் இசையை சராசரி படத்திற்கான இசைப் போல் இசையமைக்க முடியாது என்றார் அவர்.

மேலும் ஆறு மாதங்களாக இசைக்காண வேலைகளைச் செய்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் அனைத்து அம்சங்களையும் பொருந்திய இசை வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் எதிர்ப்பார்த்ததால் கடினமாக உழைத்ததாக அவர் கூறினார்.

இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதாக தகவல்கள வெளியாகின. விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயராம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, அர்ஜுன் சிதம்பரம், லால், மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி மேலும் பலர் நடிக்கிறார்கள். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக திரையிடப்படும். முதல் பாகம் 2021ல் தொடக்கத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!