Latest

ஏப்ரல் மாதம் மத்தியில் மலேசியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் – WHO

கோலாலம்பூர், ஏப். 2 – நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் ஆதிக்கம் ஏப்ரல் மாத மத்தியில் உச்சத்தைத் தொடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அடுத்த வாரம் முதல் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

தென் கிழக்காசிய நாடுகளில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையில் மலேசியா முன்னணி வகிக்கிறது. இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிட்டதட்ட 3,000 நெருங்கியுள்ளது.

இந்நிலையில், நிலைமை இவ்வாறு இருக்க பொது மக்களில் பலர் இத்தொற்றின் விளைவை உணராமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அரசாங்கத்தின் கட்டுப்படுத்தபட்ட நடமாட்ட உத்தரவை பின்பற்றினால் மட்டுமே கோவிட்-19 வைரஸ் தொற்றின் வீறியத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இதுவே நாம் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டமாகும் என சுகாதார அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!