Latestஇந்தியா

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு

ஜெனிவா, ஜூன் 18 – ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. பாதுகாப்பு மன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் இந்தியாவுடன் மெக்சிக்கோ, அயர்லாந்து மற்றும் நோர்வேயும் பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்ப்பட்டன. 192 உறுப்பு நாடுகளில் 184 நாடுகளின் வாக்குளை இந்தியா பெற்றது.
லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன படைகளுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ள இப்போதைய சூழ்நிலையில் ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தரமற்ற உறுப்ப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சீனாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவதை தடுப்பற்காக சீனா பல முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கி இரண்டு ஆண்டு தவணை காலத்திற்கு இந்தியா உறுப்பினராக இருந்துவரும். ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா இடம்பெற்றுள்ளது. அந்த நாடுகள் மட்டுமே ரத்து அதிகாரத்தை கொண்டுள்ளன. இதனிடையே 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பேரளார் திருமூர்த்தி தமது நன்றியை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!