Latestமலேசியா

ஒருவர் மரணம்; புதிதாக 54 பேருக்கு கோவிட் தொற்று

புத்ராஜெயா, மே 9 – இன்று ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 108ஆக உயர்ந்தது. அதே சமயத்தில், இன்று புதிதாக கோவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 54ஆக பதிவாகியுள்ளது. தொற்று கண்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6589.

18 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அவர்களில் 6 பேர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

65 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4929 ஆகும்.

மரணமடைந்தவர் 74 வயது மலேசிய பெண்மணியாவர் அவர் ஶ்ரீ பெட்டாலிங் பள்ளி வாசலில் நடைப்பெற்ற சமய நிகழ்வில் கலந்துக் கொண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!