Latestமலேசியா

ஒருவர் மரணம்; 135 பேர் குணமடைந்துள்ளனர் & 45 பேருக்கு புதிதாக தொற்று

புத்ராஜெயா, மே 6 – நாட்டில் இன்று புதிதாக 45 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாகவும் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6428 எனவும் சுகாதாரத் துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா அறிவித்துள்ளார்.

அந்த 45 நோயாளிகளில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் என்றும் எஞ்சியவர் உள்நாட்டில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயத்தில் ஒரு மரணமும் இன்று பதிவாகியுள்ளது. இதன்வழி மொத்த மரண எண்ணிக்கை 107 ஆகும்.  இன்று 135 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4702.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!