Latestமலேசியா

ஒரு நாள் நாடாளுமன்ற கூட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் கடமையை நிறைவு செய்துள்ளது

கோலாலம்பூர், மே 19- நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டதன் மூலம்   அரசியலமைப்பு சட்டத்தின் கடமை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹசான் (Takiyuddin Hassan) கூறியுள்ளார்.  கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 55ஆவது பிரிவு (1) மற்றும்  52 ஆவது பிரிவு (1) விதிகளுக்கு ஏற்ப 14ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றவாவது கூட்டம் நடைபெற்றதுதான்  முக்கியம்  என   சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கு  பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான  தக்கியுடின்  ஹசான்  கூறினார்.

நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டம் நடைபெற்றதன் அவசியத்தை   மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.  அரசியலமைப்பு சட்டத்தில் அந்த இரண்டு பிரவுகள்தான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என அவர் சொன்னார். ஆக்க்கடைசியான நாடாளுமன்றம் கூட்டம் நடைபெற்ற  ஆறு மாதங்களுக்குள்  மேற்போகாத காலக்கட்டத்தில்  நாடாளுமன்ற கூட்டத்தை  பேரரசர் கூட்ட வேண்டும். இரண்டாவது 52வது பிரிவி (1)  நாடாளுமன்ற கூட்டத்திற்கு வரத்தவறிய   நாடாளுமன்மன்ற உறுப்பினர்கள் தகுதியை இழப்பார்கள் என்பதாகும்.

தொடக்கத்தில் மார்ச் 9 ஆம் தேதி நடைபெறவிருந்த   நாடாளுமன்ற கூட்டம்  மே 18ஆம் தேதி நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட்டதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என தக்கியுடின்  ஹசான் தெரிவித்தார். அடுத்த நாடாளுமன்ற கூட்டம்   ஜூலை மாதம்  25 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அவர் சொன்னார். நடப்பு அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் ஜனநாயக கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் இப்போதைக்கு முக்கியமான அம்சாம் என அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!