Latestமலேசியா

கட்சியிலிருந்து வெளியேற திட்டமா ? ஜோகூர் பி.கே.ஆர் எம்.பி. ஸ்டீவன் சோங் மறுப்பு

கோலாலம்பூர்,  மே 25 – பி.கே.ஆர். கட்சியிலிருந்து வெளியேறப் போவதாக வெளியான தகவலை ஜோகூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங் மறுத்தார்.

புதிதாக  Eco Social சமூக இயக்கம் ஒன்றை  தாம் தொடங்கியிருப்பது கட்சியில் இருந்து வெளியேறுவதற்கான  ஒரு தொடக்கம் என கூறப்படுவதை அவர் நிராகரித்தார்.

பிரிக்காத்தான் நேசனல் கூட்டணி தமக்கு அமைச்சர் பதவியை வழங்க முன் வந்ததாகவும் அதனை தாம் நிராகரித்து விட்டதாகவும் ஸ்டீவன் சோங் மறுத்தார்.

மக்களுக்கு  சிறந்த சேவைகளை வழங்குவதற்கு ஒரு தளமாக இந்த புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார். கடந்த இரண்டு நாட்களாக கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக  வெளியான தகவல் குறித்து தாம் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

தாமும்  மேலும் இருவரும் அரசு சார்பற்ற இயக்கம் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் எங்களுக்கு நெருக்கமான ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறி பிரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இணைந்து விட்டதால்  பிகேஆர் கட்சியில் எங்களுக்கு இனியும் இடம் இல்லை என வெளிவந்திருக்கும் தகவல் குறித்து தாம் ஏமாற்றம் அடைவதாக ஸ்டீவன்  சோங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பக்கத்தான் அரசாங்கம் கலைக்கப்பட்ட இரண்டு மாதத்திற்கு பின்னர் இப்போதைய அரசாங்கம் முழு அமைச்சர் பதவியை வழங்க முன் வந்ததாகவும் ஆனால் தாம் அதனை மறுத்து விட்டதாக ஸ்டீவன் தெரிவித்தார். சமூக நீதி மற்றும் சீரமைப்புக்காக தொடர்ந்து மக்களுக்கான தமது கடப்பாடு நீடிக்கும் என்றும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!