Latestஇந்தியாசினிமா

கல்லூரி மாணவி கற்பழிப்பு – நடிகரின் மகனுக்கு எதிராக புகார்

இந்தியா, மார்ச் 5 – பிரபல நடிகர் சூரியகாந்தின் மகனான விஜய் ஹரிஷ் தன்னைக் கற்பழித்திருப்பதாக வன்னாரப்பேட்டை பெண்கள் காவல்துறையில் ஒரு கல்லூரி மாணவி புகார் செய்திருக்கிறார். அந்த மாணவி பி.காம் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருக்கிறார்.

25 வயதை நிரம்பிய விஜய் ஹரிஷ் அந்த மாணவியைக் கற்பழித்ததோடு மட்டுமல்லாமல்,அந்த பெண்ணைக் கற்பழிக்கும் போது வீடியோ மற்றும் புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார்.

இந்த சம்பவம் கடந்த ஜனவரி 2ல், விருங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்தது. அங்கு அந்த மாணவியை அழைத்து சென்று , குடிக்கும் குளிர்பானத்தில் போதைப்பொருளைக் கலந்திருக்கிறார். அதை அறியாத அந்த பெண் , அப்பானத்தைக் குடித்த பிறகு, அந்த பெண்ணைக் கற்பழித்திருக்கிறார்.

தொடர்ந்து இதுபோன்று அவர் அந்த பெண்னைப் பலதடவை தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அழைத்திருக்கிறார். இதை மறுத்தால் அந்த பெண்ணின் வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதாக மிரட்டியதால் இத்தனை நாள் அந்த பெண் இதைப்பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று போலிசாரிடம் புகாரளித்தார்.

இந்த செய்தி கோலிவுட்டில் உள்ள நடிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்திருக்கின்றது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!