Latestஇந்தியாஉலகம்

கள்ளக்காதலுக்கு கணவன் இடையூர்; கார் ஏற்றி கொன்ற மனைவி

புதுச்சேரி, மே 15 – புதுச்சேரியுல் உள்ள காட்டேரி குப்பத்தைச் சேர்ந்த 35 வயது கந்தசாமி என்பவர் மார்ச் 14ஆம் திகதி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் பின்னாள் வந்த காரினால் மோதப்பட்டு மரணமடைந்தார்.

இதற்கிடையில், கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி என்பவர் கணவர் இறந்த சோகம் இல்லாமல், மிக மகிழ்ச்சியுடன் இருந்து வந்துள்ளார். அதே சமயத்தில் பக்க்த்து வீட்டு பையன் 24 வயது அஜித்குமார் என்பவனும் அடிக்கடி புவனேஸ்வரியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளான்.

இதைக் கண்ட கந்தசாமியின் தாயாருக்கு சந்தேகம் எழுந்து போலிசில் கந்தசாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரனை நடத்திய போலிசார், கந்தசாமியை கார் ஏற்றி கொல்லும்படி அஜித்குமார் கூறியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய மேல் விசாரணையில், கந்தசாமிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்தனர். கந்தசாமி வெளியூர் செல்லும்போது தனது நண்பரை நம்பிக்கையுடன் வீட்டு காவலுக்கு விட்டு சென்றுள்ளார். இதில் அஜித்குமாருக்கும், கந்தசாமி மனைவி புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். இது கந்தசாமிக்கு தெரியவந்து அவர்களுக்கிடையில் தகராறு எழுந்துள்ளது. .

இந்த நிலையில் அஜித்குமார், தனது கள்ளக்காதலி புவனேஸ்வரியை சந்திக்க முடியாமல் தவித்தார். இது குறித்து தனது நண்பர் பிரவீன் குமார் என்பவரிடம் தெரிவித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து புவனேஸ்வரி, அவரது கள்ளக்காதலன் அஜித்குமார், பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து கந்தசாமியை காரை ஏற்றி கொலை செய்து விபத்து போல் நாடகமாடுவது என முடிவு செய்து அதன்படி சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய கந்தசாமியை பிரவீன்குமார் காரை ஏற்றி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்து விபத்து நாடகமாடிய சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!