Latestஉலகம்

கழிவறை காகிதத்தை ஒளிவைத்த அம்மாவை முகத்தில் குத்திய மகன்

லாஸ் ஏஞ்சல்ஸ்; ஏப் 10 – அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக வாங்கி வைக்கப்பட்ட கழிவறை காகிதத்தை (toilet paper) மகன் மட்டுமே பயன்படுத்தி முடிப்பதால் அதனை ஒளிவைத்த அம்மாவை ஆத்திரமடைந்த மகன் முகத்தில் குத்தி காயப்படுத்தியுள்ளான்.

26 வயதான அந்த ஆடவனை போலிசார் கைது செய்துள்ளனர். இந்தக் இக்கட்டான காலக்கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு சிரமத்தை மக்கள் எதிர்நோக்குகின்றனர். எனவேதான் மகன் அதிகமாக அந்த காகிதத்தை பயன்படுத்துவதால் பிறருக்கு பயன்படுத்த போதுமான கழிவறை காகிதம் இல்லை. எனவேதான் அதனை ஒளிவைத்ததாக தாயார் கூறியுள்ளார்.

கட்டுபடுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட காலக்கட்டத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதால் சிலர் இப்படி நடந்துக் கொள்வதாக போலிஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!