Latestமலேசியா

குடிபோதையில் கடைகளை மோதிய ஆடவன் கைது; பொதுமக்கள் காயம்

கோலாலம்பூர், மே 23 – ரவாங், பெக்கான் புக்கிட் செந்தோசா அருகே, குடிப்போதையில் ஆடவன் ஒருவன் 4 சக்கர வாகனத்தால் அங்கு போடப்படிருந்த அங்காடி கடைகளையும் பொதுமக்களையும் இடித்து காயம் விளைவித்துள்ளான்.

நெஞ்சை பதபதைக்க வைக்கும் அக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக 5 புகார்கள் செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அந்த 32 வயது ஆடவனை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவன் குடிபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் நூர் அசாம் (NOR AZAM) தெரிவித்தார். மேலும், இந்த அசம்பாவித்தனால் பொதுமக்களில் ஐவர் சொற்ப காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நூர் அசாம் கூறினார். அத்துடன், 2 கார்கள், 2 மோட்டார் வண்டிகள் மற்றும் 2 அங்காடி கடை கூடாரங்கள் சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் நூர் அசாம் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!