Latestமலேசியா

குண்டர் கும்பலின் தொந்தரவைச் சமாளிக்க 4 லட்சம் ரிங்கிட் கொடுக்கப்பட்டது; நீதிமன்றத்தில் சாட்சியம்

கோலாலம்பூர், ஜூலை 3 – கிள்ளானில் 3வது பாலம் நிர்மாணிப்பின் போது குணடர் கும்பலின் தொந்தரவைச் சமாளிக்க 447,773.42 ரிங்கிட் கொடுக்கப்பட்டதாக ஒரு நிறுவனத்தின் இயக்குனர் நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளார். 2016-ல் அந்த நிர்மாணிப்பு வேலை நடந்த போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறிய செர்காஸ் முர்னி (Cergas Murni) எனும் அந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குனரான போல் லதிமெர் (Paul Latimer) எந்த குண்டர் கும்பலுக்கு அந்த தொகை வழங்கப்பட்டது எனும் விபரத்தை வெளியிடவில்லை.
முன்னாள் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ சஹிட் ஹமிடி தமது அகால் புடி (Akal Budi) அறவாரியத்தில் ஊழல் புர்ந்ததாக 47 குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நீதிமன்ற வழக்கு விசாரணையில் 73வது சாட்சியமான போல் லதிமெர் அவ்வாறு சாட்சியமளித்துள்ளார். தமது நிறுவனத்தின் காசோலை வழி அத்தொகை Lewis & Co வழக்கறிஞர் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார். 2014 முதல் 2017 வரை கிள்ளானின் 3-வது பால நிர்மாணிப்பு வேலைகள் நடந்த போது குண்டர் கும்பல் ஒன்று பிரச்சனை கொடுத்ததாகவும் அதனை தீர்க்க தமது செர்காஸ் முர்னி நிறுவனம் பணம் கொடுத்து சரிகட்ட முடுவெடுத்ததாகவும் அவர் கூறினார். வழக்கின் அடுத்த செவிமடுப்பு ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!