Latestஇந்தியா

குளிர்ச்சியான சூழலில் 28 நாட்கள் கோவிட் -19 வைரஸ் உயிர் வாழும்

வாஷிங்டன், மார்ச் 26 – குளிர்ச்சியான சூழலில் 28 நாட்கள்வரை கோவிட்-19 வைரஸ் உயிர்வாழும் என கூறப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் குடும்பத்தை சேர்ந்த பல்வேறு வைரஸ்களும் முறையாக சுத்தம் செய்யப்படாத உலோகங்கள் மற்றும் கண்ணாடிகள் மீது ஒன்பது நாட்கள்வரை உயிர்ப்புடன் இருக்கும் என கூறப்பட்டது.
ஒரு பொருளின் மேற்பரப்பில் குறிப்பிட்ட மணி நேரம் உயிருடன் இந்த கிருமி இருப்பதால் நாம் தொடும் எந்தப் பொருளின் வாயிலாகவும் கோவிட் -19 வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.
அதே வேளையில் பத்திரிக்கைகள், சஞ்சிகைள் மற்றும் இதர வர்த்தக பொருட்களில் கோவிட் –வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வின்படி தற்போது பெரிய அளவில் உயிர்க்கொல்லியாக திகழும் sars – CoV-2 வகை கோவிட் வைரஸ் வழக்கமாக வீட்டில் உள்ள உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரைகூட இருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!