Latestஉலகம்

குழந்தைகளுக்கான டெல்கம் பவுடரை தடை செய்வீர் – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

கோலாலம்பூர், மே 23- குழந்தைகளுக்கான டெல்கம் பவுடர் மற்றும் டெல்கம் அடிப்படையிலான தயாரிப்பு பொருட்களுக்கு தடை விதிக்கும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டது. இந்த பவுடரை தங்களுக்கு தெரியாமல் குழந்தைகள் நுகர்வதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறப்பதோடு கடுமையான நோய்க்கும் ஆளாவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹிடின் அப்துல் காதர் தெரிவித்தார்.
டெல்கம் பவுடரில் magnesium silicate hydroide (மெக்னிஷியம் சிலிகேட் ஹைட்ராக்சைடு) இருப்பதால் கருப்பை மற்றும் நுரையீரலில் கட்டியை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். குழந்தைகளுக்கு வியர்வை மணத்தை போக்குவதற்கு உதவியாக அவர்களது உடலில் டெல்கம் பவுடர் பூசப்படும் வழக்கத்தை தாய்மார்கள் கொண்டுள்ளனர். குழந்தைகளின் பவுடர் மற்றும் புருவங்கள், கன்னங்களில் பூசுவதற்கான , வாசனை திரவியங்களில் சேர்க்கப்படும் ஒரு வகை மென்மையான கலவை இதில் சேர்க்கப்படுகிறது. இவை கருப்பை பகுதியில் ஒட்டக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.
மலேசியாவில் பெண்களிடையே அதிகமாக காணப்படும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு டெல்கம் பவுடரும் ஒரு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்டுதோறும் 500 பேர் இந்த பற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர நுரையீரலிலும் டெல்கம் பவுடர் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மொஹிடின் தெரிவித்தார், டெல்கம் பவுடர் மிகவும் நுன்ணிய தன்மையை கொண்டதாக இருப்பதால் குழந்தைகளின் நுரையீரலில் எளிதாக சேரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாறாக சோள மாவு மற்றும அரிசி மாவில் தயாரிக்கப்படும் பவுடரை பயன்படுத்துவதே பாதுகாப்பானதாக இருக்கும் என மொஹிடின் அப்துல் காதர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!