Latestமலேசியா

கூட்டத்தில் கலந்துக் கொண்ட அதிகாரிக்கு கோவிட் தொற்று; பிரதமர் 2 வாரம் தனித்திருப்பார்

கோலாலம்பூர், மே 22 – கோவிட்-19 தொற்றுக்குள்ளான அதிகாரியுடன் தொடர்பில் இருந்ததைத் தொடர்ந்து பிரதமர் மொஹிடின் யாசின் இரண்டு வாரம் தனித்திருப்பார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது பரிசோதனையில் கோவிட் தொற்று இருப்பதற்கான  அறிகுறி தென்படவில்லை.  இருந்தபோதிலும் இன்று தொடங்கி   14 நாட்களுக்கு அவர் தம்மை தனிமைப்படுத்திக்கொள்வார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்தது.

புதன்கிழமையன்று தமது அலுவலகத்தில் அமைச்சரவைக்கு பிந்திய கூட்டத்தில் கலந்துகொண்டபோது  கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான அதிகாரி ஒருவரும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அதனால் தொற்றின் தாக்கத்திற்கு பிரதமர் உள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. மொஹிடின் தமது வீட்டில் தனித்திருக்கும்படி பணிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும்  பரிசோதனையை மேற்கொள்வதோடு  14 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!