Latestமலேசியா

கெடாவின் புதிய மந்திரிபுசார் முகமட் சனுசி இன்று பதவியேற்பு

கோலாலம்பூர். மே 16- கெடாவின் புதிய மந்திரிபுசார் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 2 அளவில் பதவி உறுதிமொழி எடுப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்வழி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப்பின் கெடா மந்திரிபுசாராக இரண்டு ஆண்டு காலம் இருந்த முக்ரிஸ் மகாதீர் பதவி ஒரு முடிவுக்கு வருகிறது.
பக்கதாத்தான் ஹராப்பான் கூட்டரசு அரசாங்கத்தின் அதிகாரத்தை பெரிக்காத்தான் நேசனலிடம் இழந்தபின் கெடா மந்திரிபுசாராக முக்ரிஸ் தொடர்ந்து நீடிப்பாரா என்ற கேள்விக்குறி இருந்து வந்தது. பி.கே. ஆர் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியை சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மொஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்ததைத் தொடர்நது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை முக்ரிஸ் இழந்தார். இதனைத் தொடர்ந்து கெடாவில் பாஸ் தலைமையில் புதிய அரசாங்கம் அமையவிருக்கிறது. .
பாஸ் கட்சியின் ஜெனரி சட்டமன்ற உறுப்பினர் முகமட் சனுசி முகமட் நோர் இன்று புதிய மந்திரிபுசாராக பதவியேற்கவிருக்கிறார். இந்த உறுதி மொழி சடங்கிற்கான ஒத்திகையில் அவர் இன்று கலந்துகொண்டார். இன்று காலை மணி 10. 55 அளவில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் கெடா சுல்தான் சலேஹூடின் பட்லீஷாவும் கலந்துகொண்டார். நாளை கெடா மாநில அரசாங்க செயலாளர் புதிய மந்திரிபுசாரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!