Latestமலேசியா

கோவிட் தடுப்பூசி மருந்து இப்போதைக்கு கண்டுபிடிக்கப்படாது

வாஷிங்டன்,  மே 25 – உலகளாவிய நிலையில் கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 லட்சம் பேராக அதிகரித்துள்ள நிலையில் இப்போதைக்கு அந்த தொற்றுக்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படாது  என்று அமெரிக்க அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

புற்றுநோய், எச்.ஐ.வி  – எய்ட்ஸ் மருந்து தொடர்பில்  புத்தக ஆய்வில் ஈடுபட்டு
வருபவருமான வில்லியம்  ஹெசல்டின் என்ற அந்த அறிவியலாளர் ராய்ட்டர்ஸ்
செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கோவிட் –  19 தொற்றுக்கான தடுப்பூசி அல்லது மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென அவர் தெரிவித்தார்.
மாறாக கோவிட் தொற்றை தடுப்பதற்கு சமூக இடைவெளியை அதிகரித்து, நடமாட்ட கட்டுப்பாட்டை மேலும் பலப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதிலும் கோவிட் பரவியிருந்தாலும் சில நாடுகள் இந்தத் தொற்றின்‌ பரவலை குறைக்கும் அணுகுமுறையில் வெற்றி பெற்றுள்ளதாக வில்லியம்  ஹெசல்டின்  கூறினார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும்  அமெரிக்காவில் உள்ள நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் தடுப்பூசி தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். தொடக்கத்தில் அமெரிக்க நிறுவனத்தின் முதற்கட்ட பரிசோதனைகள் வெற்றிக்கான அறிகுறியை கொண்டிருந்தது. எனினும் இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியினால் மூக்கின் மூலம் தொற்று  பரவுவதை தடுக்க முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.

கோவிட் தடுப்பூசி பரிசோதனை மூலம் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளில் தொற்று பரவுவதை குறைத்திருந்தாலும் இன்னமும் தொற்று இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே கோவிட் தொற்றை தடுப்பதில்   தனிப்பட்ட நபர்களின் முயற்சிதான் முக்கிய பங்காற்ற முடியும் என அவர் கூறினார்.

இப்போதைய நிலையில் தடுப்பூசி அல்லது மருந்துகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூடநோய்க்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்று  பரவுவதை தடுக்க முடியும்.

பொதுமக்கள் எப்போதும் முக கவசத்தை அணிந்து இருக்க வேண்டும் என்பதோடு கைகளை தூய்மைப்படுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்தத் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என வில்லியம் ஹெசல்டின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!