Latestஇந்தியாஉலகம்

கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இந்தியாவுக்கு 4ஆவது  இடம்

புதுடில்லி, ஜூன் 12 – உலகில் கோவிட் தொற்றினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட    நாடுகளின் பட்டியலில் இந்தியா  4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்  10,956க்கும் மேற்பட்டோர்  தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.   இதன்வழி அந்நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை   298,482 ஆக உயர்ந்தது

அதோடு இந்தியாவில் கோவிட் தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 8,512ஆக அதிகரித்த்து.  ஒரே நாளில் இந்தியா முழுவதிலும்  396பேர் மாண்டனர். இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  அற்கு அடுத்து தமிழகம்,  புதுடில்லி, குஜராத், உத்தர பிரதேசம் , ராஜஸ்தான்  மற்றும் மத்திய பிரதேசம் திகழ்கிறது,

உலகில் கோவிட் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களைக்  கொண்ட நாடுகளின் பட்டியலில்   அமெரிக்கா முதல் இடத்திலும்,   பிரேசில் இரண்டாவது இடத்திலும்   ரஷ்யா  மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!