Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு புதிதாக அறுவர் பாதிப்ப

கோலாலம்பூர், ஜூலை 9 – இன்று கோவிட் தொற்றுக்கு புதிதாக அறுவர் பாதிக்கப்பட்டனர். இதன் வழி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8683 ஆக உயர்ந்த்து. கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்வழி கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,499 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனையில் இன்னமும் 63 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இவர்களில் தீவிர சிகிச்சை பிரிவில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இன்று கோவிட் தொற்றுக்கு உள்ளான ஆறு பேரில் ஐவர் வெளிநாட்டில் இருந்தபோது இந்த தொற்றுக்கு உள்ளாகினர். ஒருவர் உள்நாட்டில் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!