Latestமலேசியா

கோவிட்– 19 அனைத்துலக மருந்து பரிசோதனையில் இணையவுள்ள மலேசியா

கோலாலம்பூர். ஏப் 6 – கோவிட்–19 வைரஸ்  தொடர்பான அனைத்துலக மருந்து பரிசோதனையில்  மலேசியாவும் சேர்ந்துகொள்ளும்.  பினாங்கு மருத்துமனையின்   தொற்று நோய் ஆலோசகர் டாக்டர் CHOW TING SOO தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள 9 மருத்துவமனைகளில் இந்த மருந்துகள் குறித்த  பரிசோதனை நடைபெறும்.  மருத்துவர்கள் மற்றும் மருந்தகர்கள் உட்பட இதர  16 பேர்  டாக்டர் CHOW TING SOO தலைமையிலான இந்த  குழுவில் இடம்பெற்றிருப்பார்கள்,

கோவிட்-19 வைரஸ் தொற்றை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக  REMDESIVIR, LOPINAVIR / RITONAVIR, INTETERFON BETA. CHLOROQUINE மற்றும்  HYDROXYCHOLOROQUINE  ஆகிய மருந்துக்களின் பாதுகாப்பு மற்றும் அதன் விரீயம் குறித்த தகவல்கைளை  உலகம் முழுவதிலும்  பரிசோதித்து அதனை திரட்டும்  பணியில் உலக சுகாதார நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

கோவிட் -19 வைரஸினால் பாதிக்க்ப்பட்டவர்களின் உயிர்களை காற்பாற்றுவதற்கான இந்த மருந்துகளின் ஆக்கப்பூர்வமான பலன் மற்றும் அதனை பயன்படுத்தவோருக்கான பாதுகாப்பு போன்ற அம்சங்களையும் அறிந்து கொள்வதற்கான  உலகளாவிய பரிசோதனையில்  மலேசியாவின்  பங்கேற்பு இருப்பதாக  சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர்  நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறினார்.

கங்கார், மற்றும் அலோஸ்டார் மருத்துவமனைகள், பினாங்கு பொது மருத்துவமனை,  சுங்கை பூலோ, கோலாலம்பூர், மலாக்கா மற்றும் குவந்தான்  மருத்துவமனைகள்,   சரவா பொது மருத்துவமனை மற்றும்  சபா QUEEN ELIZABETH மருத்துவமனை ஆகியவற்றில் கோவிட்-19 வைரஸ் மருந்துகளுக்கான பரிசோதனை நடைபெறும்.

மலேசியாவில் இதுவரை  3,662 பேருக்க கோவிட் -19 தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரை 2,596 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் மற்றும் 1,005 பேர்  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மலேசியாவில்  இதுவரை   61 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!