Latestமலேசியா

கோவிட்-19 : இந்தியாவிற்கு சென்று வந்த ஆடவர் உட்பட எழுவர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 29- இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பிய 37 வயது ஆடவர் உட்பட எழுவர் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதின் தொடர்பில் மரணமடைந்தாக சுகாதார தலைமை இயக்குனர் நூர் இஷாம் அப்துல்லா அறிவித்தார். கோவிட்-19 உயிர்க்கொல்லியினால் மலேசியாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், 55.6% பெரும்பாலும் 60 வயதிற்கு மேல் உட்பட்டவர் என்றும் 67.6% இரத்த அழுத்தம்,நீரிழிவு போன்ற கடுமையான நோய்களைக் கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மரணமடைந்த 28-ஆவது நபர் 91 வயதுடைய பெண்மனி ஆவார். மார்ச் 26 ஆம் தேதி கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2,321 நோயாளியாக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 8.48 மணியளவில் மரணமடைந்தார். இவர் நீண்ட நாட்களாக நீரழிவு , இரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மரணமடைந்த 29-ஆவது நபர் 61 வயது பெண்மணி ஆவார். மார்ச் 25 ஆம் தேதி சிரம்பான் துங்கு ஜபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 10.15 மணியளவில் மரணமடைந்தார். இவரும் நீண்ட நாட்களாக நீரழிவு, இரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்.

மரணமடைந்த 30-ஆவது நபரான 76 வயதுடைய ஆடவர் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11.33 மணியளவில் மரணமடைந்துள்ளார். இவரும் நீரழிவு நோய், இரத்த அழுத்தம் கடுமையான நோயின் பின்னணியைக் கொண்டுள்ளார்.

மரணமடைந்த 31 நபர் 27 வயது இளம் வயதினராவார். மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மரணமடைந்தார். இவர் நீரிழவு நோய், இரத்த அழுத்தம் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்.

மரணமடைந்த 32 ஆவது நபர் 50 வயது ஆடவராவார். இவர் ஶ்ரீ பெட்டாலிங் பள்ளி வாசலில் நடைப்பெற்ற சமய நிகழ்வின் பங்கேற்பாளர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 22 தேதி ஜோகூர் இன்சே பெசார் ஹஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளை சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 7.44 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த 33-ஆவது நபருக்கு 37 வயது. இவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொன்டு நாடு திரும்பியவர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மார்ச் 21ஆம் தேதி ஜோகூர் பெர்மாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11.25 மணியளவில் மரணமடைந்தார்.

மரணமடைந்த 34 நபர் 77 வயது ஆடவர். மார்ச் 18ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 10.40 மணியளவில் மரணமடைந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!