Latestஉலகம்

கோவிட் 19: உலகளாவிய நிலையில்    5,090,064  பாதிப்பு ; 3,29,732 பேர் உயிரிழந்தனர்

லண்டன், மே 21 -உலகளாவிய நிலையில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,090,064 ஆகியது. இவற்றில் அமெரிக்காவில் மட்டும் 1,593,039 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு அந்த வல்லரசு நாட்டில் இதுவரை 94,941பேர் மரணம் அடைந்துள்ளனர். அங்கு இன்னமும் 17,000த்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்பட்டுள்ளனர் என ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் (JOHNS HOPKINS) பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளி விவர தகவல்கள் கூறுகின்றன.

அதிகமாக தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது ரஷ்யா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ரஷ்யாவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அங்கு இதுவரை 308,705பேர் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ரஷ்யாவில் 2,972 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கோவிட் தொற்று இப்போது தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் மிகவும் வேகமாக பரவுத் தொடங்கியுள்ளது. அந்த நாட்டில் 293,357பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். பிரேசிலில் இதுவரை 18,894பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் இன்னமும் 8,000த்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் தொற்று விவகாரத்தை கையாள்வதில் பிரேசில் அதிபர் JAIR BOLSONARO மிகவும் மெத்தன போக்குடன் இருப்பதாக  அந்நாட்டில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் கோவிட் 19 தொற்றை சாதாரணமான காய்ச்சல்தான் என பிரேசில் அதிபர் கூறிவருவது வியப்பை ஏற்படுத்தி  வருவதாக அந்நாட்டு மருத்துவர்கள் கூறினர்.

ஐரோப்பா வட்டாரத்தில் ஸ்பெய்ன், பிரிட்டன், இத்தாலி பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளிலும் கோவிட் 19 பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளன. ஸ்பெய்னில் இதுவரை 27,888பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரிட்டனில் 35,704பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 32,330பேரும் பிரான்ஸில் 28,132பேரும் மரணம் அடைந்துள்ளனர். இந்த நான்கு நாடுகளிலும் கிட்டத்தட்ட 5,000த்திற்கும் மேற்பட்டோர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!