chinaLatestஉலகம்

கோவிட்-19 எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை ஊரடங்கை மீட்டுக் கொள்ளகூடாது

ஹாங்காங், ஏப் 9 – கோவிட்-19 பரவலின் மையப்புள்ளியாக கருதப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் 76 நாட்களாக விதிக்கிப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று முதல் மீட்டுகொள்ளப்பட்டது. ஆனால் மக்கள் தங்களின் நடமாட்டத்தையும் பிறறோடு பழகுவதையும் இந்த உயிர்கொல்லி வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்பிருந்த பழைய நிலைக்கு வெகு விரைவாக திரும்ப அனுமதித்தால் இரண்டாம் அலை தாக்கத்திற்கு ஆளாக நேரிடும் என மருத்துவ ஆய்வு ஒன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சீனாவை உதாரணமாக கொண்டு மேற்கொண்ட அந்த ஆய்வு, மக்கள் நடமாட்டத்தை உடனடியாக அகற்ற கூடாது எனும் ஆலோசனையை பிற நாடுகளுக்கும் விடுத்துள்ளது. நாம் இந்த வைரஸ்-சுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுப்பிடிக்காத வரையில் எதுவேண்டுமானாலும் எச்சமயத்திலும் நடக்கலாம். அதுவரையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கிய பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு சமசீர் நிலையை நாம் உருவாக்க வேண்டும். இந்த அணுகுமுறையிலான கொள்கைகளை அரசாங்கங்கள் அமுலுக்கு தற்சமயம் கொண்டுவர வேண்டும் என அந்த ஆய்வுக் குழுவில் ஒருவரான ஹாங்காங் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Gabriel M Leung பரிந்துரைத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!