Latest

கோவிட் -19 என்ன ஜின் பேயா? போட்டலில் பிடித்து அடைப்பதற்கு? – முஜாஹிட் ரவா

கோலாலம்பூர், ஏப் 2 – கோவிட் -19 வைரஸை வெற்றிகரமாக பிடித்து போத்தலில் அடைத்து விட்டதாக கூறிக்கொண்ட நபர் ஒருவரின் செயலை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பது என்று தமக்கு தெரியவில்ல என சமய விவகாரத்திற்கான முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யூசோப் கூறியுள்ளார்.

இஸ்லாத்தின் பெயரில் இது போன்ற சடங்குகளை நடத்திவரும் சில தனிப்பட்ட நபர்களின் போக்கு குறித்து அமனா கட்சியின் மூத்த தலைவருமான அவர் கவலை தெரிவித்தார். தம்மை இஸ்லாமிய மருத்துவர் என கூறிக்கொண்ட ஆடவர் ஒருவர் கோவிட் 19 வைரஸை தம்மால் பார்க்க முடியும் என்பதோடு அதனை பிடித்து போத்தலில் அடைப்பது போன்ற காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த காணொளியில் அந்த ஆடவர் நோயாளி ஒருவருக்கு சடங்குகளை செய்வதையும் பின்னர் நோயாளியின் கையிலிருந்து வைரஸை இழுத்து அதனை போட்டலில் அடைப்பது போன்றும் உள்ளது.

கோவிட்-19 என்ன ஜின் பேயா அல்லது ஆவியா என முஜாஹிட் வினவினார். இதனை உலகம் பார்த்தால் நம்மை பார்த்து ஏளமாக சிரிப்பார்கள் என்றும் அவர் சொன்னார். இதுபோன்ற செயல்கள் அறிவியலுக்க அப்பாற்பட்டு நாம் பின்னோக்கி செல்வதை காட்டுவதாக முஜாஹிட் கூறினார்,

கோவிட் -19 என்பது ஒரு வைரஸ். அறிவியல் ரீதியில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மூலமாக மட்டுமே ஒவ்வொருவரையும் குணப்படுத்த முடியும் என முஜாஹிட் தெரிவித்தார், கோவிட் -19 வைரஸை பிடித்து போத்தாலில் அடைந்துவிட்டதாக அந்த ஆடவர் சமுக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி காட்சி குறித்து கருத்துரைத்தபோது முஜாஹிட் இவ்வாறு கருத்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!