Latestமலேசியா

கோவிட்-19 ; தனித்திருக்கும் காலக்கட்டத்தின் கடைசி நாளில் மீண்டும் பரிசோதனை செய்யாவிட்டால் நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூன் 29 – வீட்டில் 14 நாட்கள் தனித்திருக்கும் காலக்கட்டத்தை முடித்தவர்கள் கடைசி நாளில் மீண்டும் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருப்பது குறித்த சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. வீட்டில் தனித்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டவர்களில் கால் வாசிக்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் கோவிட் பரிசோதனையை மேற்கொள்வதில்லை என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்
இந்த தனித்திருக்கும் காலம் முடியும்போது தங்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் மீண்டும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். விமான நிலையத்திலிருந்து தங்களது வீடு திரும்பும்வரை முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். தொற்றுக்கான அறிகுறி இருந்தால் உடனடியாக மாவட்ட சுகாதார அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். தனித்திருக்கும் காலக் கட்டத்தில் கையில் கண்காணிப்பு பட்டையை அணிந்திருக்க வேண்டும் என்பதோடு தனித்திருக்கும் காலத்தின் 13ஆவது நாளில் மீண்டும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கோவிட் பரிசோதனை முடிவை அருகேயுள்ள மாவட்ட சுகாதார அலுவகத்திற்கு கொண்டு சென்று 14 நாள் கண்காணிப்பு பட்டையை அகற்றிக்கொள்ள வேண்டும்,
இவ்வாறு செய்யத் தவறுவோர் மீது இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் என டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார். ஜூன் 10 ஆம் தேதி தனித்திருக்கும் மையங்களில் இருந்து வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்ட 5,909பேர் எஞ்சிய 14 நாள் தனித்திருக்கும் காலக்கட்டத்தில் வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் இவர்களில் 4,437பேர் மட்டுமே 14 நாள் தனித்திருக்கும் காலக்கட்டம் முடிவடைவதற்கு ஒரு நாளுக்கு முன் அதாவது 13ஆவது நாளில் மீண்டும் கோவிட் பரிசோதனையை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
இப்போதைய நடப்பு விதிமுறையின் கீழ் வெளிநாட்டிலிருந்து யார் நாடு திரும்பினாலும் கோவிட் 19 பரிசோதனைக்கு உள்ளாகும் பொருட்டு 14 நாட்கள் அவர்கள் தங்களது வீடுகளில் தனித்திருக்க வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!