Latestமலேசியா

கோவிட்-19 தாக்கத்தினால் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு 45 பில்லியன் ரிங்கிட் இழப்பு

கோலாலம்பூர், ஜூலை 15 – கோவிட்-19 தொற்றின் பாதிப்பினால் எல்லைகள் மூடப்பட்டதில் நாட்டின் சுற்றுலாத் துறை இவ்வாண்டு சுமார் 45 பில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியிருப்பதாக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
அனைத்துலக சுற்றுலாத் துறை மட்டுமே 31 பில்லியன் ரிங்கிழ் இழப்பை சந்தித்துள்ள நிலையில் உள்ளூர் சுற்றுலாத்துறை 14 பில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியுள்ளது.
அந்த அமைச்சின் புள்ளி விவரப்படி 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுற்றுலாத்துறையின் வருமானம் 21.4 பில்லியனாக இருந்தது. ஆனால் இவ்வாண்டு அதே காலக்கட்டத்தில் வருமானம் 41.5 விழுக்காடு குறைந்து 12.5 பில்லியன் ரிங்கிட்டை மட்டுமே எட்டியுள்ளது.
இருப்பினும் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்போது, இந்த நிலை சீரடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 சீற்றம் முழுமையாக சீரடையும் வரையில், மலேசியர்கள் உள்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே சமயத்தில் உள்நாட்டு சுற்றுலாத் தளங்களில் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை அமைச்சு கண்கானீத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!