Latestமலேசியா

கோவிட் -19 தொற்றுக்குள்ளான மருத்துவரும் குடும்ப உறுப்பினர்களும் குணமடைந்தனர்

கோலாலம்பூர், ஏப் 6 – தெலுக் இந்தான் மருத்துவமனையின் அவசர மற்றும் நெருக்கடி பிரிவின் தலைவர் டாக்டர் SAMSU AMBIA ISMAIL, அவரது மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகள் என் ஒட்டு மொத்த குடுப்பத்தை சேர்ந்த எழுவர் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த தொற்றிலிந்து குணமடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அந்த மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் டிக் டோக் செய்திருந்த காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவர்களின் இந்த மகிழ்ச்சியான செய்தியை அந்த குடும்பத்தின் மூத்த புதல்வியான 17 வயது ERIKA SYAMIK ஞாயிற்றுக்கிழமை இரவு டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

இறுதியில் கோவிட் விடுபட்டது என்ற விளக்கத்தைக் கொண்ட தமது குடும்பத்தினரின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். மருத்துவமனை உடையிலிருந்து அவர்களது குடும்பத்தினர் அனைவரும் வழக்கமான உடையில் காணப்படும் வகையில் அமைந்திருந்த டிக் டோக் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

எங்களது குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எங்களது நன்றிகள் என்றும் அவர் கூறியிருந்தார். மூன்று கட்ட மருதுவ பரிசோதனைக்குப் பிறகு கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டதாக ERIKA SYAMIM பெர்னாமாவுன் டிவிட்டர் உரையாடலில் கூறியிருந்தார். தாங்கள் அனைவரும் வீட்டில் 14 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!