Latestமலேசியா

கோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு

புத்ரா ஜெயா, மே 26 – இன்று புதிதாக மேலும்  187 பேர்  கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகினர். இந்த தொற்றுக்கு உள்ளானவர்கள்  நால்வர் மட்டுமே மலேசியர்கள் என சுகாதாரத் துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளான 187 பேரில் 10 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் . இவர்களில் எழுவர் மலேசியர்கள் மற்றும் எஞ்சிய மூவர் நிரந்தர வசிப்பிட தகுதியை கொண்டிருப்பவர்கள்.

மலேசியர் அல்லாத 173 பேரில் வெளிநாட்டினரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

புக்கிட் ஜாலில் குடிநுழைவு தடுப்பு முகாமில் 155 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் செராசில் 13 பாதுகாவலர்களும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் நோயிலிருந்து மீண்டனர். இதன்வழி மலேசியாவில்  கோவிட் -19 தொற்றிலிருந்து  மொத்தம் 6,041 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

எட்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 5 பேருக்கு செயற்கை சுவாச கருவியின்  உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!