Latestமலேசியா

கோவிட் 19 தொற்றுக்கு இன்று புதிதாக 3 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், ஜூன் 29 – கோவிட்-19 தொற்றுக்கு இன்று புதிதாக மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்வழி இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,637 ஆக உயர்ந்தது. நாடு முழுவதிலும் இன்னும் 182 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் நால்வர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8,334 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
புதிதாக தொற்றுக்குள்ளான மூவரில் ஒருவர் வெளிநாட்டில் இந்த தொற்றுக்கு உள்ளாகியவர். இரண்டு மலேசியர்கள் உள்ளூரில் இந்த தொற்றுக்கு உள்ளாகினர். சிலாங்கூரில் இரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும், சபா சண்டகானில் வேலையிடத்தில் பரிசோதிக்கப்ட்ட மற்றொரு நபருக்கும் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
வெளிநாட்டில் இருந்தபோது இந்த தொற்றுக்கு உள்ளான 28 வயதுடைய மலேசியர் பீஜி மற்றும் நியூசிலாந்திற்குள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பிறகு சிங்கப்பூருக்கு சென்ற அந்த நபர் அங்கிருந்து மலேசியா திரும்பினார். தற்போது 17 இடங்கள் கோவிட் தொற்று பரவக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டபோதிலும் அந்த இடங்களில் புதிதாக எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார் . புதிதாக எந்தவொரு மரணச் சம்பவம் பதிவாகவில்லை. கோவிட் தொற்றுக்கு இதுவரை 121பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!