Latestமலேசியா

கோவிட்-19 தொற்றுக்கு ஒருவர் பலி; புதிதாக 19 பேருக்கு தொற்று பரவல்

புத்ராஜெயா,, ஜூன் 5 – கோவிட்-19  தொற்றுக்கு  இன்று  ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதன்வழி இந்த தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம்  மற்றும் சிறுநீரக  புற்றுநோய் பின்னணியை கொண்டிருந்த 61 வயது ஆடவர்  கோவிட் -19 பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார் என  சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர்  டாக்டர் நோர் ஹிஷாம்  அப்துல்லா தெரிவித்தார்.

நேற்றைய எண்ணிக்கையை விட இன்று கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  19 பேராக குறைந்துள்ளது. இதன்வழி கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  8,266 ஆகியுள்ளது, புதிதாக தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேருக்கு உள்நாட்டினர் மூலம் தொற்று பரவியது. இவர்களில் மூன்று வெளிநாட்டினரும் அடங்குவர் என  டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மருத்துவமனையிலிருந்து முழுமையாக  6,610 பேர் குணமடைந்துள்ளனர்.  அறுவர் இன்னமும்  தீவிர சிசிக்சை பிரிவிலும்  ஒருவர்   செயற்கை சுவாச கருவியின் மூலமும்  சிகிச்கை பெற்று வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!