Latestஇந்தியா

கோவிட் -19 தொற்றுக்கு நாளுக்கு நாள் இந்தியா மோசமடைந்து வருகிறது

கோவிட்-19 தொற்று பரவல் பல நாடுகளில் ஓரளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்தியாவில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு நாளில் மட்டும் 15,372 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டதோடு 423 பேர் பலியாகியுள்ளனர். இது ஒரு நாளில் மிக அதிகமான சம்பவங்கள் பதிவான நாளாகும். தமிழ் நாட்டிலும் இப்பரவல் அதிகரித்து வருவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் அங்கு புதிதாக 2,532 பேருக்கு அத்தொற்று ஏற்பட்டது. 53 பேர் பலியாகினர்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 26 ஆயிரத்து 400 பேர் கொரொனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதோடு 13,695 பேர் மரணமுற்றுள்ளனர். இத்தொற்று பதிவான எண்ணிக்கை அடிப்படையில் உலகளவில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. உலகளவில் இத்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், 4 லட்சத்து 67 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!