Latestமலேசியா

கோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு

புத்ரா ஜெயா, மே 25 – இன்று புதிதாக மேலும்  172 பேர்  கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகினர்.  இதன்வழி இந்தத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7, 417 ஆக உயர்ந்தது

34 பேர் நோயிலிருந்து  குணமடைந்து இல்லம் திரும்பினர். இதன்வழி
5,9,79 பேர் முற்றாக குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்றுக்குள்ளான 172 பேரில் ஐவர்  வெளிநாட்டிலிருந்தபோது இந்த தொற்றுக்கு உள்ளானவர்கள்.

இதர 167 பேர் உள்நாட்டில் இந்த தொற்றுக்கு உள்ளானவர்கள்
இவர்களில் 159 பேர் மலேசியர் அல்லாதவர்கள். இன்று தொற்றுக்கு உள்ளானவர்களில்  8 பேர் மட்டுமே மலேசியர்கள். குடிநுழைவு தடுப்பு முகாம்களில் இருந்த 112 பேரும் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடங்குவர்.
இன்னமும் ஆயிரத்து 323 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் 8பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் நால்வருக்கு செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

குடிநுழைவு தடுப்பு முகாம்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்து மலேசியர்கள் கவலை அடைய வேண்டியதில்லை. பொதுமக்களிடமிருந்து தொலைதூரத்தில் இருப்பதால் இதுகுறித்து அவர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை என சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!