Latestமலேசியா

கோவிட் -19 தொற்று  மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை

புத்ரா ஜெயா, மே 26 – கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி இரண்டு வாரங்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும்.

அதன்பிறகு தொற்று அவர்களுக்கு இருந்தாலும்கூட மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். . எனினும் இவர்கள் அடுத்த இரண்டு வார காலத்திற்கு தனித்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் கோவிட் -19 தொற்று சிகிச்சை நடைமுறையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொற்று கண்ட 2 வாரத்திற்குப் பிறகு புதிதாக மீண்டும் தொற்று ஏற்படாது என சுகாதாரத் துறையின்  தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எனவே இந்த புதிய தகவலின்படி கோவிட்  தொற்று ஒருவருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டு 14 நாட்களுக்கு மட்டுமே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும் என அவர் கூறினார். அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறுவோர் இரண்டு வாரங்களுக்கு தனித்திருக்க வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!