Latestஇந்தியா

கோவிட்-19 :இந்தியாவில் மரண எண்ணிக்கை 2,549ஆக உயர்வு

புதுடில்லி, மே 14- இந்தியாவில் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் என்ணிக்கை 78,003ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,722 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகினர். கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய 134 பேர் மாண்டதாக இந்திய சுகாதாரத்துறை வெளிட்ட அறிக்கையில் கூறியது. இதன்வழி இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,549ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் -19 தொற்றுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் திகழ்கிறது.  அந்த மாநிலத்தில் மட்டும் 25,922பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மட்டும் மராட்டிய தலைநகர் மும்பை உட்பட பல்வேறு இடங்களில் 54பேர் மாண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!