Latestமலேசியா

கோவிட்-19 : மலேசியர்கள் மாதந்தோறும் ரிம500 EPFலிருந்து மீட்டுக் கொள்ளலாம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23 – கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுபடுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவினால் மக்கள் பண நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

அதனை எதிர்கொள்ள, ஊழியர் சேமநிதி பணத்தின் 2வது கணக்கிலிருந்து 12 மாதத்திற்கு மாதத்திற்கு 500 ரிங்கிட் மலேசியர்கள் மீட்டுக் கொள்ளலாம்.
இது ஏப்ரல் முதல் தேதி விண்ணப்பிக்கலாம் எனவும் 55 வயதுக்கு கீழ்பட்ட அனைத்து மலேசியர்களும் இதற்கு தகுதி பெறுகிறார்கள் எனவும் பிரதமர் மொஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.

ஏறக்குறைய 40 பில்லியன் ரிங்கிட்டை மக்கள் ஒட்டுமொத்தமாக தங்களின் ஊழியர் சேமநிதி கணக்கிலிருந்து மீட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்பதாக அவர் அறிவித்தார்.
இதனிடையே கோவிட்-19 தாக்கத்தை எதிர்கொள்ள கூடுதலாக 500 மில்லியன் ரிங்கிட் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படுகிறது.

கூடுதலாக 2000 மருத்துவ ஊழியர்கள் குறிப்பாக தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுக்க 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கங்கள் இத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி நிதி வழங்க மொத்தமாக 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த் ஒதுக்கீடு அரசியல் வேறுபாடின்றி அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.

PTPTN கடனுதவியைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டம் 3 மாதத்திலிருந்து 6 மாதமாக நீடிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!