Latestஉலகம்

கோவிட் 19 மையப்புள்ளியாக பிரேசில் 10லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று

ரியோ டி ஜெனிஐரோ , ஜூன் 20 – கோவிட் -19 தொற்றின் மையப் புள்ளியாக தற்போது பிரேசில் மாறிவருகிறது. அமெரிக்காவில் பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்திய கோவிட் தொற்று தற்போது பிரேசில் நாட்டில் கொத்து கொத்தாக மரணத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த லத்தின் அமெரிக்க நாட்டில் ஒரு நாளில் 54.771பேர் தொற்றுக்குள்ளாகினர்..
அந்த நாட்டில் இதுவரை 10 லடசத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 49,090 பேர் மரணம் அடைந்துள்ளனர். 21கோடியே 20லட்சம் பேர் மக்கள் தொகையைக் கொண்ட பிரேசிலில் உண்மையில் மாண்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது
. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூஹன் நகரில் முதன் முதலில் ஏற்பட்ட இந்த கோவிட் 19 தொற்றின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த உயிர்க்கொல்லிக்கு தற்போது உலகம் முழுவதிலும் 87 லட்சத்து 66,035பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நான்கு லட்சம் பேர் உயிரழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் 54,000த்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். அதிக அளவில் மரணத்தை பதிவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 121,407பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!