Latestமலேசியா

கோவிட் -19 வைரஸ் – அபாயகரமான பகுதியாக உலு சிலாங்கூர் பிரகடனம்

கோலாம்பூர். ஏப் 10- கோவிட் -19 வைரஸ் தொற்றினால் சிலாங்கூரில் மற்றொரு அபாயகரமான மண்டலமாக உலு சிலாங்கூர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து நடப்பில் உள்ள அபாயகரமாக மண்டலங்களின் நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

இம்மாதம் 8ஆம் தேதிவரை உலுசிலாங்கூரில் 34 பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். தற்போது அந்த வட்டாரத்தில் இந்த எண்ணிக்கை 40ஆக அதிகரித்ததைத் தொடர்நது அபாயகரமான மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலுசிலாங்கூரில் செரண்டாவில் 24பேரும் , பத்தாங் காலியில் 13பேரும் , உலு பெர்னாமில் மூவரும் களும்பாங்கில் ஒருவரும் கோவிட் -19 வைரஸ் தொற்குக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்பட்டது.

இதனிடையே கோலாலம்பூரில் லெம்பா பந்தாயில் 417பேர் கோவிட் -19 வைரஸினால்  பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வட்டாரம் தொடர்ந்து அபாயகரமான மண்டலமாக இருந்து வருகிறது. சிலாங்கூரில் உலு லங்காட்டில் 366 பேரும் பெட்டாலிங்கில் 314பேரும் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவ்விரண்டு பகுதிகளும் அபாயகரமாக மண்டலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று ஏப்ரல் 9ஆம் தேதிவரை மலேசியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு  4,228 பேர் உள்ளாகியுள்ளனர்.  இந்த தொற்றினால் இதுவரை 67பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!