Latestஇந்தியா

கோவிட் -19 வைரஸ் ; இந்தியாவில் 5000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

புதுடில்லி, ஏப் 8 – இந்தியாவில் கோவிட் -19 வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்த உயிர்க்கொல்லிக்கு 5,194பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் 773பேர் புதிதாக கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினர். புதிதாக 10பேர் மரணம் அடைந்தனர். இதன்வழி இந்தியாவில் கோவிட் -19 வைரஸிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது.

இந்த தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழம் திகழ்கிறது. தமிழகத்தில் மட்டும் 690பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!