Latestமலேசியா

கோவிட்- 19 வைரஸ் உலகளாவிய நிலையில் 60,000த்திற்கும் மேற்பட்டோர் பலி

நியூயார்க்,  ஏப் 5 – கோவிட் 19 வைரஸ் தொற்றினால் உலகளாவிய நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,000திற்கு மேல் உயர்ந்தது. அதோடு சுமார் 11 லட்சம் பேர் இந்த உயிர்க்கொல்லியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஐரோப்பாவில் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் மரண எண்ணிக்கை சற்று குறைந்தது அந்நாட்டு அதிகாரிகளிடையே மனநிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நியூயார்கில்   கோவிட்‌ -19 வைரஸ்  தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர்  மரணம் அடைந்தனர். இதன்வழி அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,300 ஆக உயர்ந்தது.

அமெரிக்காவில் இந்த உயிர்க்கொல்லி தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 306,000 ஆக அதிகரித்தது. இந்த  வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கர்கள்  முக கவசத்தை பயன்படுத்த வேண்டும் என்பதோடு வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இத்தாலியில்  கடந்த 24 மணி நேரத்தில்  681பேர் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணமடைந்தனர்.  பிப்ரவரி 21 ஆம் தேதி  அந்த நாட்டில்  கோவிட் – 19 வைரஸ் பரவியது முதல்
இதுவரை   15,362 பேர் மரணமடைந்தனர். ஈஸ்டர்  நெருங்கி வருவதால் நேப்பல்ஸ், மிலான் .,ரோம் போன்ற நகரங்களிலிருந்து மக்கள் வெளியே வருவது அதிகரித்திருப்பதால்   கோவிட் -19  வைரஸ்  பரப்புவதற்கு மேலும் வாய்ப்பை ஏற்படுத்தி விடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்

ஸ்பெயினில்  புதிதாக 809 பேர் உயிரிழந்ததை  தொடர்ந்து அங்கு மரணம் அடைந்தவர்களின்  எண்ணிக்கை 11,744ஆகியது.

அந்த நாட்டில்   124,736 பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது .
அடுத்த இரண்டு வாரங்களுக்கு  நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு அங்கு நீட்டிக்கப்பட்டது.

பிரான்சில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 441 பேர் மரணம் அடந்தனர்.

இதனால் அந்த நாட்டில் மரண எண்ணிக்கை 7,560ஆக உயர்ந்தது. அதோடு பிரான்சில் 89, 953 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 5 வயது சிறுமி உட்பட  708 பேர் மரணமடைந்தனர். அந்த நாட்டில் 41,903 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!