Latestமலேசியா

கோவிட்-19 வைரஸ்  தடுப்பு மையங்களாக ஷங்ரிலா – ஹில்டன் உட்பட  5 தங்கும் விடுதிகள்

கோலாலம்பூர், ஏப் 6 – கோவிட்-19 வைரஸிற்கு எதிரான நீண்ட கால போராட்டத்திற்கு தயாராகும் பொருட்டு  ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகள்  மற்றும்  விளையாட்டு அரங்குகளை  தடுப்பு மையங்களாக   பயன்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாட்டில இதுவரை 60க்கும் மேற்பட்டோர்  இந்த தொற்றுக்கு பலியாகியிருப்பதால் தொற்றுக்குள்ளானவர்களை தடுத்து வைக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை அவசியம் தேவையென  சுகாதார அமைச்சர்   டாக்டர் அடாம் பாபா கூறினார்.

தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டத்தின்  கீழ் இந்த  கட்டிடங்கள்  அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யப்படும் என  அவர் சொன்னார்.  நாடு முழுவதிலும் உள்ள 551 தடுப்பு  மையங்களில்  சுமார்  40,000 பேர்வரை தங்கியிருக்க முடியும் என  அரசாங்கம் நேற்று கூறியிருந்தது.

லங்காவியில் ஹோட்டல் அட்யா செனாங், தஞ்சோங் ரூ ரிசோர்ட், பினாங்கு தஞ்சோங் பூங்காவில்  கோல்டன்  சென்ட் ரிசோட்  ஷங்ரிலா, பினாங்கு ரைய்ன்போ பரடைஸ் பீச் ரிசோர்ட்,  பேரா சுங்கையில்  பெல்டா ரெசிடென்ஸ்  துரோலாக். பெட்டாலிங் பெஜயாவில் பேஸ்ட் வேஸ்டர்ன், புத்ரா ஜெயா மற்றும் சைபர்  ஜெயாவில்  கூப்  ஹோட்டல், சுபாங் டோர்செட் கிராண்ட், பூச்சோங் போர் போய்ன்  ஷரட்டோன்,  பூச்சோங் ஹில்டன் கார்டன் பெட்டாலிங் ஜெயா ஹில்டன் , ஸ்ரீ கெம்பாங்கான் பேலஸ் ஒவ்  கோல்டன் ஹோர்சஸ் உட்பட  49 தங்கும் விடுதிகள்  இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதோடு நாடு முழுவதிலும்  பல்வேறு விளையாட்டரங்குகளும்  தடுப்பு முகாம் நடவடிக்கைக்கு தேர்வு   செய்யப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!