Latestஉலகம்

கோவிட்-19 வைரஸ் தொடர்பான ஆராய்சிக்கு தலைமையேற்றுள்ள இந்திய வம்சாவளி டாக்டர் எஸ். எஸ்.வாசன்

லண்டன், ஏப் 27 – தற்போது உலக மக்களின் உயிருக்கு பெரிய மிரட்டலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட்–19 தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் தலைமையேற்றுள்ளனர்.

காமன்வெல்த் அறிவியல், ஆராய்சி நிறுவனத்தின் அறிவியலாளரான டாக்டர் எஸ்.எஸ் வாசன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் இந்திய வம்சாவளியினரான பேராசிரியை சுனேத்ரா குப்தா ,மேக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் அரிஞ்சய் பானர்ஜி ஆகியோர் இதற்கான முயற்சியில் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின்ல் விலங்கு, சுகாதார நிறுவன ஆய்வகத்தில் ஆபத்தான நோய்க்கிருமி குழுவை வாசன் வழிநடத்தி வருகிறார். வாசன் தலைமையிலான காமன்வெல்த் அறிவியல், தொழில் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே கோவிட்-19 வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி அதன் செயல் திறனுக்கான சோதனையை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஷிக்கா வைரஸ், டிங்கி மற்றும் சிக்குன்குன்யா போன்ற வைரஸ் தொடர்பான ஆராச்ய்சிகளிலும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.

சுனேத்ரா குப்தா கோவிட் தொற்றினால் ஏற்படுகின்ற நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறார். அரிஞ்சய் பானர்ஜி இதற்கு முன் சார்ஸ், மெர்ஸ், கோவிட் வைரஸ் போன்ற பல வைரஸ்கள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். சம்பந்தப்பட்ட இந்த மூவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் கோவிட்-19 தொற்றை துடைத்தொழிப்பதற்னாக மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பாக்கபடுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!