Latestஉலகம்

கோவிட் -19 வைரஸ் ; மரண எண்ணிக்கை 26,000த்தை தாண்டியது

ரோம், மார்ச் 28 – உலகளாகவிய நிலையில் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,000த்தை தாண்டியது. இத்தாலியில் இந்த உயிர்க்கொல்லி பரவிய நாளிலிருந்து முதல் முறையாக 24 மணி நேரத்தில் கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 969பேர் மரணம் அடைந்தனர். இதன்வழி அந்நாட்டில் இந்த வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,134 ஆக உயர்ந்தது.

ஐரோப்பா வட்டாரத்தில் கோவிட் -19வைரஸ் கிருமியினால் பெரிய அளவில் மனிதர்கள் உயிரிழப்புக்கு உள்ளான நாடாக இத்தாலி விளங்கி வருகிறது. மரண எண்ணிக்கை விரைவில் 10,000த்தை மிஞ்சக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது. மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்கனவே இத்தாலியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்ப்டுள்ளது. இத்தாலியில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மோசதாக பாதிக்கப்பட்டிருந்த Lombardy வட்டாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்திருந்த மரண எண்ணிக்கை நேற்று திடீரென அதிகரித்து, புதிதாக மேலும் 5,959பேருக்கு கோவிட் -19வைரஸ் தொற்றியது. தற்போது அந்நாட்டில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 86,500 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!