Latestமலேசியா

கோவிட் -19 வைரஸ்- மலேசியாவில் 9வது நபர் பலி; உயிரிழந்தவர் மருத்துவர்

கோலாலம்பூர் மார்ச் 22 –

கோவில் 19 வைரஸ் தொற்றுக்கு மலேசியாவில் இன்று மேலும் ஒருவர் மரணமடந்தார். இந்த தொற்றுக்கு மரணமடைந்த 9ஆவது
நபர் இவர் என சுகாதாரத் துறையின் தலைமை இயக்குனர்  டாக்டர் நோர் ஹிஷாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையை சேர்ந்த 49 வயதுடைய மருத்துவர் மரணம் அடைந்ததை  டாக்டர்   நோர் ஹிஷாம் உறுதிபடுத்தினார். அந்த மருத்துவர் துருக்கிக்கு சென்று வந்த பின்னணியை கொண்டிருந்தார்.

சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த மருத்துவர் மார்ச் 17ஆம தேதி கங்கார்
துவாங்கு பவ்ஷியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு கோவிட் -19  தொற்று இருப்பது மார்ச் 18ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.

நோயின் தாக்கம் குறையவில்லை என்பதால் மார்ச் 19ஆம் தேதி முதல் செயற்கை சுவாச கருவி உதவியோடு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

அந்த மருத்துவர் இன்று காலை மணி  10.33 அளவில் மரணம் அடைந்தார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுகாதார அமைச்சு அனுதாபம் தெரிவித்து கொள்வதாகவும் டாக்டர்   நோர் ஹிஷாம் கூறினார்.

இதுவரை கோவிட் -19வைரஸ் தொற்றினால்
37 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேர் சுவாசிப்பதற்கு சுவாசக் கருவியின் உதவி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று 153 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதன்வழி இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,183பேர் என அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!