Latestமலேசியா

கோவிட்-19 வைரஸ் 10 ஆவது நபர் மரணம்

கோலாலம்பூர் மார்ச் 22

நாட்டில் கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
இதன்வழி இந்த உயிர்க்கொல்லியினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக123 பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்வழி இந்த தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதிலும் 1306 ஆக அதிகரித்துள்ளது.

ஆகக் கடைசியாக கோவிட்- 19 தொற்றுக்கு உள்ளான 123 பேரில் 74 பேர் கடந்த மாதம் கோலாலம்பூரில் ஸ்ரீ பெட்டாலிங் மஸ்ஜித் ஜாமேக் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

46 நோயாளிகள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 22 பேருக்கு சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

25 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 139 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!