Latestமலேசியா

சனிக்கிழமை முதல் புக்கிட் புரோகா ஹில்ஸ் மலையேறும் இடம் மூடப்படும்

கோலாலம்பூர், ஜூன் 25 – இந்த சனிக்கிமை முதல் புக்கிட் புரோகா (Bukit Broga) மலையேறும் இடம் மூடப்படும். 1988ஆம் ஆண்டின் நோய் தடுப்பு மற்றும் தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டு சட்டத்தின் 18ஆவது விதியின் கீழ் பின்னர் அறிவிக்கப்படும் தேதிவரை அந்த மலையேறும் பகுதி மூடப்படவுள்ளது. இது தொடர்பான உத்தரவை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கிறது.
தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரிடையே SOPயை பின்பற்றும் போக்கு குறைந்து வருவது குறித்து ஊடகங்களில் வந்த தகவலுக்கு பதில் அளித்தபோது சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா இதனை தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளுக்கு ஏற்ப கடைகள் மற்றும் நிறுவனங்களும் செயல்படவில்லை.
கோவிட் – 19 தொற்று பரவலை தடுப்பதற்கு நாட்டின் தற்காப்பு முறைக்காக நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் மற்றும் புதிய வழங்கங்களை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக இவ்வளவு நாட்களாக சுகாதார அமைச்சு மேற்கொண்ட முயற்சிகளை அலட்சியப்படுத்தாமல் வாழ்க்கையின் அனைத்து தரப்பட்ட மக்களும் அதனை தொடர் வேண்டும் என டாக்டர் நோர் இஷாம் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!