Latestமலேசியா

சமுக வலைத்தலங்களில் புண்படுத்தும் கருத்துக்கள்; ஒற்றுமையை சீர்குலைக்கும் – பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 9 – சமூக வலைத்தளங்களில் மனதை புண்படுத்தக்கூடிய வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் தெரிவித்தார். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த போதிலும் அவர்கள் தொடர்ந்து சமுகத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை சமுக வலைத்தளங்களில் தெரிவித்து வருவதாக பிரதமர் சொன்னார்.
வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமுக வலைத்தளங்களில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் கருத்துக்கள் குறித்து அதிகாரிகள் அதிகமான புகார்களை பெற்றுவருகின்றனர்.

விசாரணை நடத்தப்பட்டு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற கருத்துக்கள் பொதுமக்களின் மனதை புண்படுதுவதோடு மக்களின் ஒற்றுமை மற்றும் ஐக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதை மொஹிடின் சுட்டிக்காட்டினார். ருக்குன் நெகாரா கோட்பாட்டின் இன்று 50ஆவது ஆண்டு நிறைவுநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையின்போது அவர் இதனை தெரிவித்தார்.

மலேசியாவின் அடிப்படை ஒற்றுமைக்கு முக்கிய தூண்களாக விளங்கும் ருக்குன் நெகாரா கோட்பாட்டை மலேசியர்கள் பின்பற்ற வேண்டும். ருக்குன் நெகாரா கோட்பாட்டை பின்பற்றி செயல்பட்டால் நாம் சகிப்புத்தன்மையோடு இருக்க முடியும் என்பதோடு எந்தவொரு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய அல்லது மற்றவர்களை புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்க முடியும் என பிரதமர் வலியுறுத்தினார். அனைவரும் சட்டத்திற்குற்பட்டவர்கள் என்பதை மலேசியர்கள் எப்போதும் மறந்துவிடக்கூடாது. சட்டத்தை யார் மீறினாலும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு தயங்காது என முஹிடின் எச்சரித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!