Latestமலேசியா

சமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை

கோலாலம்பூர், மே 21- பினாங்கு புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த 20 வயதுடைய திவ்யநாயகி (THIYANAYAGI) Cyberbully எனப்படும் சமுக வலைத்தளங்களில் பகடி வதைக்கு உள்ளாகி வேதனையால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமுக வலைத்தளங்களில் பகடிவதை செய்வோருக்கு எதிராக போலீஸ் மற்றும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள், உட்பட பொதுமக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். கண்ணுக்கு தெரியாத பொறுப்பற்ற நபர்கள் போலிஅடையாளத்தைக் கொண்டு சமுக வலைத்தளங்களில் ஏற்படுத்தும் இத்தகை பகடி வதை மற்றவர்களுக்கு மன ரீதியில் எவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதனால பலர் மனம் உடைந்து தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஏற்கனவே இது குறித்து பல்வேறு புகார்கள் செய்யப்பட்டிருந்தாலும் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் கவலைப்படுவதில்லை. இத்தகைய பகடி வதை சமுக வலைத் தளங்களில் பொறுப்பற்ற நபர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!