Latest

சாலை தடுப்பின்போது சம்மன் வழங்கப்பட்டதா? போலீஸ் மறுப்பு கோலாலம்பூர், மார்ச் 21 – மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு

உத்தரவின் கீழ் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் காவல் நிலையத்திற்கு முன் மேற்கொண்ட சாலை தடுப்பு நடவடிக்கையின் போது, வாகனமோட்டிகளுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

அவ்வாறு சம்மன்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அது ஒரு பொய்ச் செய்தி என்றும் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் அதிகாரி சைரூல்நிசாம் முகமட் சைனூடின் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளோட்டிகள் அவசர நிலை ஏற்பட்டால் மட்டுமே வெளியேற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும், வேலை முடிந்தப் பிறகு உடனடியாக அவர்களை வீட்டிற்குச் செல்லும்படி அறிவுறுத்தும் வகையில் காவல்துறையினர் சாலைத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக சைரூல்நிசாம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!