Latestமலேசியா

சாலை விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண், கணவன் பலி

அலோர் ஸ்டார், மே 14 – மலாக்கா, புலாவ் செபாங், ஜாலான் புக்கிட் மெர்சாட் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கணவனும் 7 மாத கர்ப்பிணி பெண்ணும் பலியாகினர்.

இன்று காலை 7.40 மணியளவில் 36 வயது முகமட் ஹய்ராவி மாட் ரெசாம் மற்றும் 25 வயது நூர் அயின் கமாருல்சமான் ஆகிய இருவரும் பயணித்த மோட்டார் வண்டி புரோடுவா மைவியுடன் விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளான அவர்களின் மோட்டார் வண்டி சுழன்றதால் அவர்கள் இருவரும் பல மீட்டர் தூரம் வீசப்பட்டனர். ஹய்ராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரின் மனைவி தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு தம்பின் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷாட் அபு தெரிவித்தார்.

மேலும், முதல் பிள்ளைக்கு கருத்தரித்த தனது மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக தம்பினிலிருந்து மலாக்கா மருத்துவமனைக்கு அந்த ஆடவர் அழைத்துச் செல்லும் போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது என அர்ஷாட் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!