Latestஉலகம்

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் தோங் ஓய்வு பெறுகிறார் – தேர்தலில் போட்டியிடவில்லை

சிங்கப்பூர், ஜூன் 25 – சிங்கப்பூரின் நிறைநிலை மூத்த அமைச்சர் கோ சோக் தோங் (Goh Chok Tong) அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளார். அவர் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லூங் (Lee Hsien Loong ) தெரிவித்தார். ஓய்வு பெறும் முடிவை அறிவிக்கும் கோ சோக் தோங்கின் கடிதத்தை கணத்த இதயத்தோடு தாம் ஏற்றுக்கொண்டதாக லீ ஹிசியன் லூங் கூறினார். 1976ஆம் ஆண்டில் தமது 35 வயதில் மேரின் பேரட் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகியது முதல் 44 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்துள்ளார். .
நாங்கள் இருவரும் கடந்த 40 ஆண்டு காலமாக ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம் என லீ ஹிசியன் லூங் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அதோடு அந்த பதிவில் இன்று அவ்விருவரும் சந்திக்கும் புகைப்படத்தையும் லீ பதிவேற்றம் செய்திருக்கிறார். தம்மை அரசியலுக்கு கொண்டு வந்தவரும் சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமருமான கோ சோக் தோங்கிற்கு தாம் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக லீ கூறினார்.
தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை நாட்டிற்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் சேவை வழங்கியுள்ள கோ சோக் தோங்கிற்கு சிங்கப்பூர் மக்களின் சார்பில் பிரதமர் லீ ஹிசியன் லூங் தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!